கொக்கட்டிச்சோலையில் நான்கு மதத்தினர் பங்கேற்ற நிகழ்வு

Report Print Rusath in சமூகம்

சமய மற்றும் கலாசார விழுமியங்களை ஒன்றிணைத்து கொண்டாடும் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் நேற்றைய தினம் நத்தார் பண்டிகை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வித்தியாலயத்தின் அதிபர் கோ.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களை சேர்ந்த மாணவர்களும், மதத்தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில், பண்டாரியாவெளி, மாவடிமுன்மாரி, மகிழடித்தீவு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும், ஒல்லிக்குளம், மகோயா கெப்பிடிபொல வித்தியாலய மாணவர்களும் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில் கல்விசார் அதிகாரிகளும், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers