வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் புதிய கட்டடம் திறந்து வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஓமந்தை, மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர்கள் கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் இன்று காலை 11 மணியளவில் பாடசாலையின் அதிபர் கே.தனபாலசிங்கம் தலைமையில் இத்திறப்பு விழா நடைபெற்றுள்ளது.

முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் உறுப்பினர் கோ.அஞ்சலா குறித்த கட்டடத்தை திறந்து வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதி அதிபர் கு.சிவமலரும், கௌரவ விருந்தினராக ஆசிரியர் சந்திரமோகனும் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கட்டடத்திற்கான நிதி உதவியாக 2 இலட்சம் ரூபாய் பிரான்சில் இருந்து பாடசாலையின் பழைய மாணவன் சுப்பிரமணியம் சிவகுமாரனிடம் இருந்து பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers