பாடசாலை மாணவர்களுக்கு பிரதேசசபை உறுப்பினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான அஞ்சலா கோகிலகுமாரினால் வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு, இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பாலமோட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கொந்தக்காரன்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, நவ்வி ஸ்ரீ வாணி வித்தியாலயத்தில் ஆகிய பாடசாலைகளிலுள்ள தரம் ஐந்தில் கல்வி கற்றுவரும் வசதியற்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோதரலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் குறூஸ் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers