உலகில் எங்கும் நடக்காத அதிசயம் இலங்கையில்! வியக்க வைக்கும் காணொளி

Report Print Vethu Vethu in சமூகம்

உலகில் எங்கும் நடக்காத அதிசய நிகழ்வு ஒன்று இலங்கையில் நடைபெற்றுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் குருணாகலில் முகிள் திரள் போன்ற ஒன்று வயல்வெளியில் திடீரென ஏற்பட்டமையினால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இது குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பேராசிரியர் கருத்து வெளியிட்டுள்ளார்.

குருணாகல் கட்டுவான பிரதேசத்தில் வயல் பகுதி ஒன்றில் 40 அடி உயரத்திலான முகிள் போன்ற வடிவத்திலான பனித்தட்டு போன்ற ஒன்று கீழே விழுந்திருந்தது. எனினும் இதனை முகிள் என்று உறுதியாக கூற முடியாது.

எப்படியிருப்பினும் பனிமூட்டம் அல்லது புகை போன்று ஒன்றினால் இது ஏற்பட்டிருக்கலாம். இது தொடர்பில் உறுதியான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இறுதி முடிவுக்கு வர முடியாது.

இவ்வாறான சம்பவம் எந்தவொரு நாட்டிலும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.