மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரிகள் கொலை! முன்னாள் போராளிகள் மீது சந்தேகம்

Report Print Ajith Ajith in சமூகம்

மட்டக்களப்பு - வவுணத்தீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் போராளிகள் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பொலிஸ் திணைக்களத்தின் சிரேஸ்ட நிர்வாக அதிகாரி ஒருவரை சுட்டிக்காட்டி ஐலன்ட் ஆங்கில பத்திரிகையொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தின் பின் அங்கு சென்றிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு ஆரம்ப கட்ட விசாரணைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அவர் ஜனாதிபதிக்கு சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினம் என்பவற்றை மையப்படுத்தியே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்