வவுனியாவில் எட்டு மாத குழந்தைக்கு நேர்ந்துள்ள பரிதாபம்! ஊரே சோகத்தில்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, வடக்கின் எல்லை கிராமமான - ஊஞ்சல்கட்டி பகுதியில் 8 மாத குழந்தையொன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

பிறந்து எட்டு மாதங்களேயான குழந்தையை, தந்தைவழி உறவுக்கார பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு குழந்தையின் தாய் ஆடு மேய்க்க சென்றுள்ளார்.

இந்த நிலையில் தாய் மீண்டும் வீடு திரும்பிய போது குழந்தையை காணாத நிலையில் பல இடங்களில் தேடியுள்ளார்.

சம்பவத்தை அறிந்து அயலவர்களும் அவர்களுடன் இணைந்து தேடியுள்ளனர். இதன்போதே குழந்தை கிணற்றுக்குள் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது.

பின் சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த உறவுக்கார வயதான பெண் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எனினும் கைது செய்யப்பட்டுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.