தனியார் வகுப்புக்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்

Report Print Shalini in சமூகம்

கிண்ணியா நகரசபைக்குட்பட்ட தனியார் வகுப்புகளுக்கு இடைக்கால தடை உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அனைத்து பாடசாலைகளுக்கும், மூன்றாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி அவர்களின் விடுமுறை காலத்தினை மகிழ்ச்சியாக வீடுகளில் கழிக்க வேண்டும்.

ஆகவே கிண்ணியா நகரசபைக்கு உட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் 15ஆம் திகதியில் இருந்து பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்குமாறு கோருகின்றோம்.

மேலும். 15ஆம் திகதிக்குள் தனியார் வகுப்புகளை நடத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில், அந்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.