திறமைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு - கொல்லநுலை, விவேகானந்தா வித்தியாலயத்தில் நேற்று திறமைக்கான கௌரவ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களதும் திறமைகள் இனங்காணப்பட்டு, சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முனைப்பு நிறுவனத்தினால் தூர இடங்களில் இருந்து கால்நடையாக பாடசாலைக்கு வருகை தருகின்ற, வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாணிக்கப்போடி அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையில், கவின்நிலைப்படுத்தப்பட்ட வகுப்பறையொன்று திறந்து வைக்கப்பட்டதுடன், புலம்பெயர் பழைய மாணவர்களினால் நிழல்பிரதி இயந்திரமொன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது பற்றியம் இரண்டாவது செய்தி மடலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் தி.தவனேசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் செ.கிரிதரன், முனைப்பு நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார், பொருளாளர் தயானந்தரவி, மாணிக்கப்போடி அறக்கட்டளை அமைப்பின் தலைவர் மா.குமாரசாமி, கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.