வர்த்தக நிலையமொன்றில் மின் ஒழுக்கு: பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா, கண்டி வீதியிலுள்ள மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது வர்த்தக நிலையத்தின் நிலக்கீழ் அறையில் காணப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது.

வரத்தக நிலையத்தை, உரிமையாளர் நேற்று இரவு மூடிவிட்டு சென்று இன்று காலை திறந்த போதே அனர்த்தம் நேர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்புப் படையினர், நகரசபை உறுப்பினர்கள், பொலிஸார், வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்டோர் ஸ்தலத்திற்கு சென்றுள்ளனர்.

மூன்று மாடிகளை கொண்ட குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று இரவு நிலக்கீழ் அறையில் மின்ஒழுக்கு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.