நீரில் மூழ்கி மாணவன் பலி: கடற்படை உதவியுடன் சடலம் மீட்பு

Report Print Thiru in சமூகம்

புஸ்ஸல்லாவ பகுதியில் செல்வகந்த ஆற்றிற்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதுடன் அவருடைய சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் நேற்று மாலை தனது ஐந்து நண்பர்களுடன் பெற்றோருக்கு தெரியாமல் குளிக்கச் சென்றுள்ளார்.

இதன் போது நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் முழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

சக நண்பர்கள் இளைஞனை காப்பாற்ற முயற்சித்த போதிலும் காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து கடற்படை சுழியோடிகள் மூலம் இன்று காலை குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கண்டி - பேராதெனிய கன்னொருவ ரணபிம ரோயல் கல்லூரியில் உயர்தர (2019) வர்த்தக பிரிவில் கல்வி பயிலும் கம்பளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஜே.கஜனேஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு பலியாகி உள்ளார்.

இவருடைய சடலம் இன்று காலை குறித்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டு கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.