வவுனியாவில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Report Print Theesan in சமூகம்

உலக எயிட்ஸ் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வாகன விழிப்புணர்வு பேரணி ஒன்று வவுனியாவில் நடைபெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 11.30 மணியளவில் இப்பேரணி ஆரம்பமாகியுள்ளது.

வவுனியா மாவட்ட பாலியல் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் கு.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு பேரணியை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனிபா ஆரம்பித்து வைத்துள்ளார்.

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அனுசரணையுடன் இப்பேரணி நடைபெற்றுள்ளது.