சேமமடு கிராமம் தொடர்பாக அரச அதிபருடன் விசேடசந்திப்பு

Report Print Theesan in சமூகம்

சேமமடு கிராமத்தின் உட்கட்டுமான வசதிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் எம்.கனீபா தலைமையில் நடைபெற்றது.

கிராம மக்கள் மற்றும் கிராமத்தின் பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யபட்ட குறித்த கலந்துரையாடலில் பிராதனமாக சேமமடு கிராமத்தில் காட்டுயானைகளால் மக்களிற்கு ஏற்படும் ஆபத்துகள் தொடர்பாகவும், விவசாய அழிவுகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் சேமமடு வீதிகள் புணரமைப்பு, குளத்தினை புனரமைத்தல், மக்களுக்கான வீட்டுத்திட்டம்,போன்ற விடயங்கள் தொடர்பாகவும் மாவட்ட அரச அதிபரிடம் சுட்டிகாட்டபட்டிருந்தது.

அதன் அடிப்படையில் காட்டு யானைக்கான மின்சார வேலியினை எதிர்வரும் 10.12.2018 ம்திகதிக்கு முன்பதாக செய்து தருவதாகவும் மற்றும் புனரமைப்பு வேலைகளை படிப்படியாக செய்து தருவதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சேமமடுவில் காட்டு யானைகளின் தொல்லைகள் அடிக்கடி ஏற்பட்டு வருவதுடன் அண்மையில் ஒருவர் யானை தாக்குதலிற்கு இலக்காகி பலியாகிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன்,மேலதிக அரசஅதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா , ஓய்வு பெற்ற கிராமசேவகர் முத்துராஜா, முன்னாள் பிரதேசசபை தலைவர் சிவலிங்கம், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.