பிரதேசத்தை பீதியில் உறைய வைத்த சடலம்

Report Print Manju in சமூகம்

வெயாங்கொட - கொடவெல பிரதேசத்தில் உள்ள வயலில் நபரொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பிரதேச மக்கள் பீதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மத்திய வங்கியின் சுகாதாரத் தொழிலாளியாக பணியாற்றிய 63 வயதான நபர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தனகல நீதவான் சடலத்தைப் பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இறந்த நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கைப்பை மற்றும் கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், இது கொலையைா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.