மட்டக்களப்பு தேற்றாத்தீவினை தளமாக கொண்டு இயங்கி வரும் தேனூர் நற்பணி மன்றம் 2006ஆம் வருட O/L மாணவர்களின் முழு ஆதரவுடன் தேற்றாத்தீவு மகாவித்தியாயலம் மற்றும் சிவகலை வித்தியாலய மாணவர்களுக்கு வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகணம் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணிக்கு தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் ந.நேசகஜேந்திரன் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக தேற்றாத்தீவு சிவகலைவித்தியாலய அதிபர் அ.சிறிதரன் கலந்து கொண்டார்.
தேனூர் நற்பணி மன்றத்தின் புலம்பெயர் அங்கத்தவர்கள் மற்றும் ஏனைய அங்கத்துவர்களினதும் மாபெரும் உதவியுடன் 300 மேல்பட்ட மாணவர்களுக்கு இவ் கற்றல் உபகரணங்கள் வளங்கி வைக்கப்பட்டுள்ளன.