பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்த வடக்கின் முக்கியமான பிரதேசம்

Report Print Dias Dias in சமூகம்

ஈழவிடுதலைக் கனவை நெஞ்சில் சுமந்து தம் இன்னுயிர்களை எம் தேசத்திற்காய் தந்த மாவீரர்களை நினைவு கூரும் நாள் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி ஈழத்தில் மட்டுமல்லாமல் உலகப்பரப்பு எங்கும் உணர்வு எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

முப்பது ஆண்டுகால யுத்தம் மௌனிக்கப்பட்டு வந்த பின்னர் ஈழத்தில் 2016ஆம் ஆண்டு தொடக்கம் முழங்காவில் கனகபுரம் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லங்களில் உணர்வுடன் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

இவ்வாண்டும் விடுதலைக்கனவு சுமந்த எங்கள் பிள்ளைகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் வெகு சிறப்பாக கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்றது.

இதேவேளை, 27ஆம் திகதி மாலை சரியாக 06-05 மணியளவில் முன்று பெண் மாவீரர்களின் தயார் பற்குணாம்பிகை பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார் பின்னர் மணியோசை ஒலிக்க விடப்பட்டு மாவீரர் வணக்கப்பாடல் ஒலிக்க விடப்பட்டது.

அவ்வேளை முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லமே பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்தது.