புகைத்தல், மது ஒழிப்பு தொடர்பில் விசேட விழிப்புணர்வு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிண்ணியா பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி தலமை முகாமையாளர் முஸம்மிலா ராபிக் தலைமையில் இன்று புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு கருத்தரங்கும் எச்.ஐ.வி.எயிட்ஸ் தொற்று விழிப்புணர்வும் என்ற தலைப்பில் கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் செயலமர்வும் இடம்பெற்றுள்ளது.

சமுர்த்தி பயனாளிகளை உள்ளடக்கிய வகையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் சமூக விழிப்புணர்வுக்காக புகைத்தல் எதிர்ப்பு தொடர்பில் பல விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

உலக எச்.ஐ.வி தினமான டிசம்பர் முதலாம் திகதி தொடர்பிலும் நினைவுறுத்தப்பட்டு சுகாதார வைத்திய அதிகாரியினால் விழிப்பூட்டல் இடம்பெற்றது. இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மது ஹனி அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மற்றும் உலமா சபைத் தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளாஹ் நளீமி, சூரா சபை தலைவர் ஏ.ஆர்.பரீட், சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜீத் மற்றும் சமுர்த்திமுகாமையாளர்களான எம்.பி.ஹில்மி,எம்.ஏ.எம்.றிஸ்வி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.