ஈழத்தில் 30 ஆயிரம் தமிழச்சிகளின் துயர நிலை! ஆழ்ந்த கவலையில் தமிழக முக்கியஸ்தர்

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையில் 30 ஆயிரம் தமிழச்சிகள் விதவைகளாக அவதிப்பட்டு வருகின்றனர் என தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை இனப்போரில் 80 ஆயிரம் தமிழச்சிகள் விதவைகளாகி விட்டனர். இவர்களில் 20 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.

சுமார் 30 ஆயிரம் பேர் சாப்பிடக்கூட வழியில்லாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த 30 ஆயிரம் பேருக்கும் உதவி செய்ய ஒரு அமைப்பை ஏற்படுத்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.