தொழிலாளர் தேசிய சங்கத் தலைவரின் நூற்றாண்டு பிறந்ததின நிகழ்வு

Report Print Thirumal Thirumal in சமூகம்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வி.கே.வெள்ளையனின் நூற்றாண்டு பிறந்ததின நிகழ்வு நேற்று ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நினைவு தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டு, வெள்ளையனின் உருவப் படமும் திறந்து வைக்கப்பட்டதோடு மாவலி எனும் சிறப்பிதழும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, சோ.ஸ்ரீதரன், எம்.ராம், எம்.உதயகுமார் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.