வவுணதீவில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் உடல் நல்லடக்கம்!

Report Print Murali Murali in சமூகம்

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ சாவடியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் தினேஸின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரின் பிரசன்னத்துடனும் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் இரங்கலுரையுடனும் பொலிஸ் மரியாதையுடனும் அவரது சொந்த ஊரான பெரியநீலாவணை பொது மயானத்தில் இறுதி கிரியைகள் இடம்பெற்றன.

அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட பூதவுடலை பொது மயானத்திற்கருகில் வைத்து பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டு பூரண பொலிஸ் மரியாதையுடன் 39 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாளம் தெரியாத ஆயுத தாரிகளினால் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers