கந்தளாய் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் யானைக்குட்டி மீட்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கந்தளாய் - சூரிய புர, ஜனரஞ்சன காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் யானைக்குட்டி ஒன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட குறித்த யானைக்குட்டி இரண்டு அடி நீளம் கொண்டதுடன், ஈன்று ஓன்றறை மாதமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த யானைக்குட்டியின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த யானை குட்டியை கிரித்தல பகுதிக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் வனவிலங்கு திணைக்கள யானை பாதுகாப்பு பிரிவின் கந்தளாய் பொறுப்பதிகாரி பண்டார விஐயகோன் குறிப்பிட்டுள்ளார்.