பொலிஸார் சுட்டுக்கொலை! கைதான விடுதலைப் புலி உறுப்பினர் தொடர்பில் வெளியான தகவல்?

Report Print Murali Murali in சமூகம்

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிளிநொச்சியை சேர்ந்த குறித்த நபர் மாவீர் நிகழ்வுகளுக்காக மட்டக்களப்பிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - வவுணதீவு சோதனைச்சாவடியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸில் நேற்றைய தினம் ஒருவர் சரணடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.