முல்லைதீவில் ஒதியமலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - ஒதியமலையில் இலங்கை அரசபடைகளால் சுட்டுப்படுகொலைசெய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கந்தசாமி அவர்களது தலைமையில், 32 பொதுமக்களில் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது நினைவு தூபி திறந்துவைக்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகானசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், து.ரவிகரன் ஒட்டுசுட்டான் பிரதேச சபை உறுப்பினர் சத்தியசீலன், நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர்களான ஜெயசுதாகர், செந்தூரன், கரைதுரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், முன்னாள் ஒதியமலை கிராம அலுவலர் வி.அருளானந்தம் மற்றும் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.கிரிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.