திருகோணமலையில் பன்றி இறைச்சியை கொண்டு சென்ற இருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, அக்போபுர பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 12 கிலோ பன்றி இறைச்சியை கொண்டு சென்ற இருவரை இன்று கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்போபுர, ஹித்துல் ஊற்று பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 52 வயதுடைய இருவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், சந்தேகநபர்கள் கந்தளாய் பகுதியிலிருந்து அக்போபுர பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் குறித்த பன்றி இறைச்சியை கொண்டு சென்ற போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers