வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் விக்னேஸ்வரன்!

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரசபையின் கலாசார குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழு நீ விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

விஷேட அதிரடிப்படையினரின் பூரண பாதுகாப்புடன் ஆரம்பமான நிகழ்விற்கு 30க்கும் மேற்பட்ட பொலிஸார் வீதி ஓரங்களிலும் நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தை சுற்றியும் பாதுகாப்பு கடைமையினை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை வாழ்த்தி வரவேற்கும் பதாதை ஒன்று மண்டபத்திற்கு முன்பாக ஈரோஸ் அமைப்பு உரிமைகோரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு ஒரு கட்சி சார்ந்த அரசியல் நோக்கம் கொண்டவையாக உள்ளனவா? என்ற சந்தேகத்தினை நிகழ்விற்கு வருகை தந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கு பாதுகாப்புக்கள் அகற்றப்பட்ட நிலையில் இவ்வாறான நிகழ்விற்கு விஷேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு ஏன் ஏற்படுத்தப்பட்டது என்ற கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest Offers