ஏ.ரி.எம் இயந்திரத்தில் போலி அட்டை! அபாய ஒலி மூலம் அறிந்து கொண்ட முகாமையாளர்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையை செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வங்கியின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) இன்று காலை நபர் ஒருவர் போலி அட்டையை பயன்படுத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

அதனால் வங்கி முகாமையாளருக்கு இயந்திரம் அபாய ஒலி மூலம் தெரியப்படுத்தி உள்ளது.

அதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட முகாமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது சந்தேக நபர் பொலிஸாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

எனினும் பொலிஸார் சந்தேக நபரை துரத்தி சென்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers

loading...