மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் வீட்டிற்கு சென்ற மைத்திரி

Report Print Vethu Vethu in சமூகம்

மட்டக்களப்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கு சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார்.

காலி உடுகம பிரசேத்தில் அமைந்துள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் இல்லத்திற்குச் இன்று சென்ற ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச் சாவடியில் பணி புரிந்து கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் நிரோஷன் இந்திக்க பிரசன்ன சுட்டுக் கொல்லப்பட்டார்.

பொலிஸ் உத்தியோகத்தரின் இல்லத்திற்குச் சென்று பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி மற்றும் ஏனைய உறவினர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார்.

இதன்போது இந்த சோகமான சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை ஜனாதிபதி அறிக்கை ஒன்றின் ஊடாக குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.

முழு நாட்டு மக்களையும் இந்த விடயம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வவுணதீவில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின் உடல் நல்லடக்கம்!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ சாவடியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் தினேஸின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரின் பிரசன்னத்துடனும் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் இரங்கலுரையுடனும் பொலிஸ் மரியாதையுடனும் அவரது சொந்த ஊரான பெரியநீலாவணை பொது மயானத்தில் இறுதி கிரியைகள் இடம்பெற்றன.

அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட பூதவுடலை பொது மயானத்திற்கருகில் வைத்து பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டு பூரண பொலிஸ் மரியாதையுடன் 39 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடையாளம் தெரியாத ஆயுத தாரிகளினால் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.