யாழில் தனிமையில் இருந்த மூதாட்டிக்கு அதிகாலையில் நேர்ந்த அவலம்!

Report Print Vino in சமூகம்

யாழில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி ஒருவரை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய ஒரு குழுவினர் அங்கிருத்து தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த மூதாட்டியை மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

யாழ். உடுவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

75 வயதுடைய பொன்மலர் என்ற மூதாட்டியே இதன்போது தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்றே மூதாட்டியைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த மூதாட்டியை, அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான 119 இற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்புலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.

வீட்டிலே பெரிய வளர்ப்பு நாய் நின்றுள்ளது. அது குரைத்த சத்தம் கேட்கவில்லை. இரண்டு கைகளும் கொடூரமாக அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைப்பகுதி, மற்றும் முகங்கள் முழுவதும் அடிகாயங்கள் காணப்படுகின்றன.

கொள்ளையிடும் நோக்கத்தோடு இச்சம்பவம் இடம்பெறவில்லை எனவும் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் தாதியராக பணியாற்றும் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளின் கணவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers