முல்லைத்தீவில் இராணுவ வீரர்கள் தற்கொலை முயற்சி

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் முக்கிய படைப்பிரிவுகளை சேர்ந்த இரண்டு இராணுவத்தினர் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரண்டு இராணுவ வீரர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மற்றும் கெப்பிற்றிக்கொல்லாவ பகுதியினை சேர்ந்த இரு படையினரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருவர் தூக்கில் தொங்கியும் மற்றும் ஒருவர் நஞ்சு அருந்தியும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers