பத்தரமுல்லையில் மூன்று மாடி கட்டடத்தில் திடீர் தீ

Report Print Jeslin Jeslin in சமூகம்

பத்தரமுல்லை, பெலவத்தை பிரதேசத்திலுள்ள மூன்றுமாடி கட்டிடத் தொகுதி இன்று மாலை திடீரென தீப்பிடித்துள்ளதாக கொழும்பு கோட்டை தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

மூன்று மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இந்த தீச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டை தீயணைப்புப் படைப் பிரிவு தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.