உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற 34வது ஆண்டு ஒதியமலை படுகொலை நினைவேந்தல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

நெடுங்கேணி - முல்லைத்தீவு ஆகிய பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ள ஒதியமலைக் கிராமத்தில் 32 அப்பாவி தமிழ் மக்கள் அரசாங்க படையினரால் படுகொலை செய்யப்பட்ட 34ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

கடந்த 1984ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2ஆம் திகதி ஒலுமடு கிராமத்தை சுற்றிவளைத்த அரச படையினர் கிராமத்தின் ஆண்களை அழைத்துச் சென்று வாசிகசாலை வளாகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.

இதில் கிராமத்தைச் சேர்ந்த 32 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இவர்களின் நினைவாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த 32 பேரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நடுகற்களுக்கு உறவினர்களால் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், து.ரவிகரன் மற்றும் வவுனியா வடக்கு, கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவுகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers