சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய மஹிந்தவின் படம்?

Report Print Vethu Vethu in சமூகம்

பேருவளையில் நேற்று இடம்பெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றன.

நல்லிணக்கிற்காக முஸ்லிம் பெண்ணை மஹிந்த திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இஸ்லாமிய முறைப்படி மணமகளை பெரியவர் ஒருவர் ஆசீர்வதிப்பதற்காக அவருக்கு அருகில் அமர்வது சம்பிரதாயமான வழக்கமாகும் எனவும் அதன்படியே மஹிந்த ராஜபக்‌ஷ மணமகளுக்கு அருகில் அமர்ந்திருந்தார் என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய முறையில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், கடந்த ஒன்றரை மாதங்களாக செயற்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக பல்வேறு அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மஹிந்த ராஜபக்சவுக்கு சேறு பூசும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

திருமண நிகழ்வில் களுத்துறை மாவட்ட உறுப்பினர் பியல் நிஷாந்தவும் கலந்து கொண்டார்.