யாழில் வாள்வெட்டு! விருந்தினராகச் சென்றவர் வைத்தியசாலையில்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். அச்சுவேலியில் அயல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

அச்சுவேலி, மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய தினம் வந்திருந்த விருந்தினரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து வாளினால் வெட்டியுள்ளார்.

அதனை அடுத்து வாள்வெட்டிற்கு இலக்கான நபரை வீட்டில் இருந்தோர் மீட்டு அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து வாளினால் வெட்டிய நபரை பொலிஸார் கைது செய்தனர் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட பகை காரணமாகவே வாளினால் வெட்டியதாக ஆரம்ப விசாரணைகளில் சந்தேக நபர் கூறியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.