யாழில் இராணுவத்தினரால் குளம் புனரமைப்பு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். வட்டுக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வளவில்குளம் பகுதியில் உள்ள குளம் ஒன்று இலங்கை இராணுவ வீரர்களின் மூலமாக விசாலப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு, வட்டுக்கோட்டை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

நீண்ட காலமாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்ட இக்குளம் தொடர்பாக வட்டுக்கோட்டை தெற்கு, விவசாய அமைப்பு மற்றும் யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் சிதம்பரம் மோகன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க விசாலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ இயந்திரங்களின் உதவியுடனும் அப்பிரதேச மக்களினுடைய நலன் கருதியும் குறித்த குளத்தின் அளவுப் பிரமாணத்தினை விசாலப்படுத்தி பாவனைக்குகந்த வகையில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின்போது, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, இந்திய துணைத்தூதுவர் எஸ். பாலச்சந்திரன், இராணுவ உயரதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.