யாழில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழுவினர் அட்டகாசம்! அதிகரிக்கும் அசம்பாவிதங்கள்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேட், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள், வீதித் திருத்தப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தார் பரல்கள் போன்வற்றை வாளால் கொத்திச் சேதப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.