கிளிநொச்சியில் அடையாளம் தெரியாதவர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகள் அடையாளம் தெரியாதவர்களால் இன்று அதிகாலை வேளையில் ஒட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி நகர் பகுதிகளிலும், விஸ்வமடு, வட்டக்கச்சி எனப் பல இடங்களிலும் கையால் எழுதப்பட்ட குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளில் நாட்டின் சமாதானத்தை மீறுவோர்கள் நாட்டின் துரோகிகள், பாதாள மற்றும் வன்முறைக் காரருக்கு இடமளிக்க வேண்டாம், சமாதானத்தை நடைமுறைப்படுத்த ஒன்று சேருங்கள், சமாதானத்தை மீற இடமளிக்க வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.