எழு நீ விருதை கலைஞர்கள் புறக்கணிப்பு

Report Print Theesan in சமூகம்

எழு நீ விருது வழங்கும் நிகழ்வின் விருதுகளை வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் சிலர் புறக்கணித்துள்ளதுடன் அதற்கான காரணங்களையும் ஏற்பாட்டுக் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை எழு நீ விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் வவுனியா நகரசபை கலாச்சார குழுவின் பரிந்துரையில் இடம்பெற்ற எழு நீ விருது வழங்கும் நிகழ்வில் பல முரண்பாடுகள் இடம்பெற்றிருந்தது.

வடமாகாண முன்னாள் முதலமைச்சரை அழைத்து நிகழ்வினை ஏற்பாடு செய்ததையடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அதற்கு சார்பான கட்சிகள் அனைத்தும் இந்நிகழ்வினை புறக்கணித்துள்ளனர்.

அத்துடன் வவுனியா மாவட்ட மூத்த கலைஞர்களும், சில கலை இலக்கியமன்றங்களும் இதற்கு எதிராக தமது நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் சில ஊடகவியலாளர்கள் தமது விருதினை நிராகரித்துள்ளதுடன் இந்நிகழ்வினையும் எதிர்த்து பல்வேறு கருத்துக்களையும் சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வில் சிலர் விருதினைப் பெற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

எனினும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடமிருந்து சில செய்தியாளர்கள் எழு நீ விருதினை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த சP.வி. விக்னேஸ்வரன் தமது உரையை முடித்த பின் நிகழ்வின் பாதியில் எழுந்து சென்றுள்ளார்.

இதன் போது பல்வேறு துறைக்களைச் சார்ந்த பல கலைஞர்கள் விருதினைப் புறக்கணித்துள்ளனர்.