மாவீரர் துயிலும் இல்லத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இராணுவத்தினர்! மாணவர்கள் பாதிப்பு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

வடமராட்சி எல்லன் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ள இராணுவ முகாமினரின் இசை நிகழ்ச்சி காரணமாக அப்பகுதி பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

வடமராட்சி எல்லன் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமில் நேற்று இரவு தொடக்கம் அதிகாலை வரை இராணுவத்தினர் இசை நிகழ்ச்சியை நடாத்தியுள்ளனர்.

அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு பலத்த சத்தத்துடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கா.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் பரீட்சைக்கு செல்லும் முதல் நாளிலேயே அவர்களுக்கு மனஅழுத்தங்களை கொடுக்கும் வகையில் அதிக ஒலியுடன் இசைக் கச்சேரி நடைபெற்றுள்ளமை மக்களிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணத்தின் கல்வி தரத்தை உயர்த்த பல தரப்புக்களும் முயற்சி செய்து வருகின்ற நிலையில் இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.