திருகோணமலையில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் இரண்டு குளங்கள் நிறைந்துள்ளமையினால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், புல்மோட்டை முதலாம் வட்டாரத்தில் வசித்து வரும் அறபாத்நகர், தக்வா நகர் பகுதிகளில்100 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொம்மானிமோட்டை, நாவல் கேணி போன்ற குளங்கள் நிரம்பியுள்ளதாகவும், அக்குளத்திலிருந்து மேலதிகமாக வெள்ள நீர் செல்வதற்கு சரியான முறையில் வடிகான்கள் அமைக்கப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குளங்கள் புனரமைக்கப்படும் காலத்தில் மக்கள் குடியிருக்கும் பிரதேசங்களை கவனத்திற்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் புல்மோட்டை பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.