மாற்றுவலு உடையோருக்கான தொழில் வாய்ப்பு கண்காட்சி

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

மாற்றுவலு உடையோருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் ஜெப்பூர் நிறுவனம் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

யாழ். ஜெப்பூர், செயற்கை அவயங்கள் பொருத்தும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 6ஆம் , 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் யாழ். சுண்டுக்குளி மகளீர் கல்லூரிக்கு அருகில் காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளது.

கழிவுப் பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் உற்பத்தி பொருட்களை செய்து சந்தைப்படுத்தும் நோக்குடன் குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது.

குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தபடும் பொருட்களை பார்வையிட்டு தாம் விரும்பும் பொருட்களை பயனாளிகள் உற்பத்தி செய்ய முடியும்.

அதற்கான இலவச பயிற்சிகளை ஜெப்பூர் நிறுவனம் வழங்கவுள்ளதுடன், பயிற்சி காலத்தின் போது உற்பத்திக்கு தேவையான பொருட்களை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்க உள்ளனர்.

அத்துடன் சந்தைப்படுத்த சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்திகொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கண்காட்சியினை பார்வையிட்டு, தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜெப்பூர் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.