இரணைமடு குளத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் அபிவிருத்தி தொடர்பில் அங்கஜன் இராமநாதன் விஜயம் ஒன்றை மேற்கொண்டு குளத்தின் தற்போதைய நிலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இரணைமடு குளத்திற்கு இன்று மாலை 5.30 மணியளவில் விஜயம் மேற்கொண்ட அவர் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளர், பொறியியலாளர் எஸ்.சுதாகரனிடம் குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த குளத்தின் கீழ்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்செய்கையினால் பாதிப்பு ஏற்படுமா? விவசாயிகளுக்கான மானிய உரம் வழங்க முடியுமா என்பது தொடர்பிலும் பொறியியலாளர் மற்றும் கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.