துஷ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்த நபருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உடந்தையாக இருந்த நபர் ஒருவரை இம்மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டுள்ளார்.

வென்ராசன்புர - கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த, தொலைபேசி மூலம் கதைப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையிலே பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers