வயிற்று வலியால் துடித்த மாணவன் - பெற்றோர்களுக்கோர் எச்சரிக்கை

Report Print Rusath in சமூகம்

அம்பாறை - கல்முனை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவர் வயிற்றுவலி காரணமாக அஷரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சத்திரசிகிச்சை நிபுணர் மொகமட் சமிமின் முயற்சியின் பலனாக மாணவனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இன்று ஆரம்பமான பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் தனது முகப்புத்தகத்தின் வாயிலாக தெரிவித்துள்ளதாவது,

பெற்றோர் பரீட்சைக் காலங்களில் மாணவர்களின் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு வயிற்று நோவுகள் வரும் போது பிள்ளைகள் பொய் சொல்கிறார்கள் என்று பெற்றோர் கவனயீனமாக இருப்பதுண்டு.

இதனால் உயிராபத்து வரும் நிலையும் காணப்படுகின்றது. எனவே மாணவர்களுடைய கல்வி, உடல் சுகாதாரம் தொடர்பில் பெற்றோர் அக்கறையுடன் இருக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சை நிபுணரின் திறமைக்கும், முயற்சிக்கும் பலரும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இவர் அண்மைக் காலங்களில் பல சிறந்த சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வெற்றி கண்டமையும் குறிப்பிடத்தகது.