மெய்சிலிர்க்க வைக்கும் இலங்கையர்களின் செயற்பாடு! வெளியானது CCTV காணொளி

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை மக்களின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்படவிருந்த பாரிய விபத்து ஒன்றிற்கு முன்னர் அதனை தடுப்பதற்காக இலங்கையர்கள் மேற்கொண்ட செயற்பாடு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்தான பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் லொரி ஒன்று திடீரென நின்றுள்ளது.

அதேநேரம் அந்தப் பாதையால் ரயில் ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இதன்மூலம் பாரிய விபத்து ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவானது.

எனினும் அந்தப் பகுதியில் இருந்த அனைவரும் ஒன்றிணைந்து தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் ஆண்கள், பெண்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் விரைந்து செயற்பட்டனர்.

இந்த சம்பவம் அருகில் இருந்த சீசீடிவியில் பதிவாகியுள்ளது.

இலங்கையர்களின் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு இதுவொரு சிறந்த உதாரணம் என சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Latest Offers