வவுணதீவில் பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து திருகோணமலையில் போராட்டம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டமையை கண்டித்து தமிழர் ஜனநாயக அமையத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

வவுணதீவு பகுதியில் 2 பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும், தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்ற போதிலும் புனர்வாழ்வு பெற்று வெளியில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்கள் மிகவும் பீதியில் இருப்பதாகவும் தமிழ் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மீண்டும் அசாதாரண சூழ்நிலை இடம்பெறக்கூடாது என்பதை தாங்கள் விரும்புவதாகவும் தமிழ் மக்கள் பயமின்றி வாழ்வதற்குரிய அனைத்து வழிவகைகளையும் வகுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழ் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரமல்ல இலங்கை நாட்டிலும் பயமின்றி வாழ்வதற்குரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதி இதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தமிழர் ஜனநாயக அமையம் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அபேவர்தனவிடம் மகஜர் ஒன்றை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers