இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இன்று காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்ற கனேடிய உயர்ஸ்தானிகர் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதிஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தின் பொருளாதார நிலை தொடர்பிலும், காணிப்பிரச்சினைகள் தொடர்பிலும், காலநிலை மாற்றங்களினால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.