மட்டக்களப்பில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் ஆய்வு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பிலான ஆய்வுகளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடம் மேற்கொண்டு வருகின்றது.

இன்படி இன்று காலை மண்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லடி, உப்போடை பகுதியில் பொது மக்களை பரிசோதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆரம்ப சுகாதார பிரிவு திணைக்களத்தின் தலைவர் கே.அருளானந்தம், கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட சிரேஸ்ட விரிவுரையாளர் ஞா.கிஷோகாந்த் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பிலான ஆய்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாக இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட சிரேஸ்ட விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆரம்ப சுகாதார பிரிவு திணைக்களத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers