கிளிநொச்சி கரைச்சி பிரதேச 2018ஆம் ஆண்டிற்கான கலாசார விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையுடன் கரைச்சி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார பெருவிழா 2018 பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்துகின்ற வகையில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த நிகழ்வில் கரையெழில் ஏழு நூல் வெளியிடப்பட்டுள்ளது. நூலினை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் லு.சுலேகா பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சிறப்பு விருந்தினராக மேலதிக அரச அதிபர் சி.சத்தியசீலன், ந. கௌரதாசன், ஆகியோருடன் கலைஞர்கள், உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.