வவுனியாவில் ஆறுமுகநாவலர் நினைவு தின நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - பூந்தோட்டம், ஆறுமுகநாவலர் வீதியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஞாபகார்த்த நினைவுத்தூபியில் ஆறுமுகநாவலரின் நினைவு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் வவுனியா நகரசபை உறுப்பினர் பால பிரசன்னா மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பினரால் நினைவு கூரப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் தமிழருவி சிவகுமார் ஆறுமுகநாவலரின் சொற்பொழிவுடன் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தனியார் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளதோடு, ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உடுபுடவைகள் தனியார் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவாக இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் ஆறுமுகநாவலரின் நினைவுத்தூபிக்கு அருகில் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

Latest Offers