ஐ.நா.பிரதிநிதிகள் முல்லைத்தீவிற்கு விஜயம்

Report Print Dias Dias in சமூகம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர் அதிகாரிகள் முல்லைத்தீவுக்கு இன்று சென்றுள்ளனர்.

அங்கு சிவில் சமூக அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் தாக்கங்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரையும் இதன் போது சந்தித்துள்ளனர்.

தமிழர் மரபுரிமை பேரவையினரை இன்று நண்பகல் ஜ.நா.பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை இணைத்தலைவர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழர் மரபுரிமைப் பேரவையின் சார்பாக இன்று ஐ.நா.பிரதிநிதிகளை சந்தித்து நாங்கள் இன்று கலந்துரையாடியுள்ளோம்.

தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய தாக்கங்கள் பிரச்சனைகள், இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் நாங்கள் ஜ.நா.பிரதிநிதிகளுக்கு விரிவாக எடுத்துரைத்துள்ளோம்.

தற்கால நிலைமைகள் தொடர்பிலும் எமது அமைப்பினால் முனனெடுக்கப்பட்ட கடந்தகால செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் தமிழர் மரபுரிமை பேரவை செய்யவுள்ள காரியங்கள் பற்றியும் அவர்களுடன் நாங்கள் பேசியிருந்தோம்.

அவர்களும் எங்களுடைய செயற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்துகொண்டதுடன் எதிர்கால எமது திட்டங்கள் தொடர்பில் அவர்களுடன் இன்று கலந்துரையாடக் கூடியாதாக இருந்தது என்று தெரிவித்தார்.

Latest Offers