திருகோணமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

வவுணதீவில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கொன்றமைக்காக நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம் என தெரிவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் திருகோணமலையில் கண்டனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நேற்று மாலை 5.30 மணிக்கு இப்பேரணி ஆரம்பமாகியுள்ளது.

பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் 50ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இக் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

மெழுகுவர்த்திகளை கொளுத்திய வண்ணமும், பொறுப்புடன் எமது சமாதானத்தை நாமே பாதுகாப்போம் என பதாகைகளை ஏந்தியவாறும் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது பொதுஜன பெரமுனவினால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கொடூர யுத்தத்தின் பின்னர் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களான நாங்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கின்றோம்.

பயங்கரவாதத்தின் கொடூரங்களை நாம் நன்கு அனுபவித்துள்ளோம் சமரசம் எனும் சமாதானம் என்ற பெயரில் 10 வருட சமாதான காலத்தில் அபிவிருத்திக்கான விழிப்புணர்வுகளை ஒன்றாக இணைந்து செயற்படுகின்றோம்.

திருகோணமலையிலுள்ள நாங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு எதிராக உருவாகும் ஒரு போரை மீண்டும் விரும்பவில்லை சமீபத்தில் வவுணதீவில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கொன்றமைக்காக நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

இந்த கொடூரமான கொலைகள் மற்றும் துப்பாக்கிச்சூடு கொடூரமான 30 வருடகால சகாப்தத்தை மீண்டும் நினைவுப்படுத்த முடிகின்றது அத்தகைய ஒரு காலத்தை நாம் மீண்டும் ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டோம்.

இது வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் எழுப்பப்படும் ஆனால் அதைக் கட்டுப்படுத்துவதே எங்கள் பொறுப்பாகும். எமது எதிர்ப்பு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உள்ளத்தில் அச்சம் இல்லாமல் வாழ்வதே திருகோணமலை மக்களாகிய நாம் சாதி, இன, பேதங்களை மறந்து பெற்றெடுத்த சமாதானத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஒன்றிணைந்து செயற்படுவோம்” என துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers